நீட் ரத்து: பாஜக - அதிமுக கூட்டணிக்கு செக் வைத்த CM ஸ்டாலின்!
BJP NEET MK Stalin DMK ADMK Edappadi Palaniswami
இன்று ஊட்டி மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் விலக்குச் சட்டமசோதாவை நிராகரித்த மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் நீட் விளக்கு குறித்து அறிவித்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினேன். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த சூழ்நிலையில் கூட திமுகவின் மீதுதான் குற்றம் சுமத்தியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
மேலும், “திமுக ஆட்சி காலத்தில் நீட் இருந்ததா? தலைவர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்தபோது நீட் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பா.ஜ.க-வுக்கு வணங்கி, நீட்டை ஏற்றுக்கொண்டார்கள். இது தான் உண்மை,” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மேலும், பா.ஜ.க.வுடன் முன்னாள் கூட்டணியிலிருந்தபோது, இப்போது கூட அதே புதிய கூட்டணி தேடும்போது, நீட் விலக்கு குறித்து நிபந்தனை விதிக்காமல் இருப்பது ஏன்? என சவால் விடுத்தார்.
“இந்தியா கூட்டணியின் சார்பில் ராகுல் காந்தி, நீட் எதிர்ப்பு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தேர்தல் உறுதியளித்தார். அதேபோல் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்திருந்தால் இன்று நீட் விலக்கு கிடைத்திருக்கும்,” எனவும், “தமிழக மாணவர்களுக்காக உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்றால், நீட் விலக்கு பெற்றால்தான் கூட்டணி என பா.ஜ.க-விடம் முதலில் அதிமுக நிபந்தனை வைக்கட்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
BJP NEET MK Stalin DMK ADMK Edappadi Palaniswami