அமைச்சரவை மாற்றம் ஏமாற்றத்தை தரும் - தமிழிசை செளந்தர்ராஜன்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

அப்போது பேசிய அவர்,  அமைச்சரவை மாற்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்றமாகவும், அண்ணன் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்றும், யார் ஏற்றம் பெறப் போகிறார்கள், யார் ஏமாறப் போகிறார்கள் என்று தெபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர், கண்டிப்பாக ஏமாற்றத்தைத் தரப்போகிறது  என்று கூறியுள்ளார்.

மேலும், திமுக பொறுப்பேற்ற பின்னர் 17 என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், யாரையோ காப்பாற்றுவதற்காக இது நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லாத நிலையில், சமூக நீதியைப் பற்றி பேசுபவர்கள், அதை பின்பற்றமாட்டார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், வாரிசு அரசியல் முறையில் இவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என்று சாடினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabinet change will be disappointing Tamilisai sowndharrajan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->