காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுவோரின் பாராட்டு தேவையில்லை - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுவோரின் பாராட்டு எனக்கு தேவையில்லை; மக்களின் பாராட்டு எனக்கு போதும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சியில் பெரியதாவது, 

"கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள்.

கொளத்தூர் தொகுதியை போன்று அனைத்து தொகுதிகளுக்குமே முக்கியத்துவம் வழங்கப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கைகளை அனுப்ப எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள். விமர்சனங்களை நினைத்து கவலைப்பட மாட்டேன், விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin speech in kovai aug


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->