கோவை : காங்கிரஸ் கட்சியில் வெடித்தது மோதல்!...இதோ போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Coimbatore a conflict broke out in the congress party here is the action taken by the police
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கடந்த 17-ம் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து விட்டு டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை வழியனுப்பி வைப்பதற்காக வந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
தொடரந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு இருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.
இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்த நிலையில், கோவை செல்வன் மாநகர காவல் நிலையத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார், அவருடன் வந்த தமிழ்ச்செல்வன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Coimbatore a conflict broke out in the congress party here is the action taken by the police