அதானி விவகாரத்தில் 'இந்தியா' கூட்டணிக்கு தொடர்பு?...தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
Contact with india alliance in adani issue tamilisai soundararajan sensational interview
தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்மையில் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, இது தொழில் துறையில் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், அதானி விவகாரத்தில் மத்திய அரசும், பாஜகவும் விளக்கம் அளித்துவிட்டதாக கூறினார்.
மேலும், தமிழ்நாடு போன்ற 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆளும் அரசுகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும், பிரதமர் மோடியை பொறுத்தவரை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த அவர்,
மருத்துவமனை, நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் கத்திக்குத்து நடத்தப்படும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், கள்ளச்சாராயம் குடித்து இறந்திருந்தால் அதிக நிதி கிடைக்கும் என்றும், பட்டாசு தொழிற்சாலை விபத்து உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவே நிதி கிடைக்கும் என்று விமர்சித்து பேசினார்.
English Summary
Contact with india alliance in adani issue tamilisai soundararajan sensational interview