பிரியாணி கடைகளுக்கு ஆபத்து.. குண்டர் அணி என சொல்லுங்கள்.. திமுக நிர்வாகி வெளியிட்ட அறிவிப்பால் சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


திமுகவில் அங்கீகரிக்கப்பட்ட 23 அணிகள் உள்ளன. அதற்கான புதிய பொறுப்பாளர்களை சமீபத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் நியமித்தார். இந்த நிலையில் திமுகவின் தொண்டர் அணியில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்  நிர்வாகிகள் நியமனத்தில் சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திமுகவின் மாநில தொண்டர் அணி செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் திமுக தொண்டர்கள் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகளை கீழ்காணும் தகுதிகளை கொண்டவர்களை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்குமாறு மாவட்ட கழக செயலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

1) தொண்டர் அணி மாவட்ட தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர் 50 வயதுக்கு மிகவும் மாவட்ட துணை அமைப்பாளர் 45 வயதுக்கு மிகாமலும் ஐந்து புள்ளி ஐந்து அடிக்கு மேற்பட்டவர்களாகவும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். 

2) சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ள கழக தோழர்களை கண்டெடுத்திட வேண்டும். 

3) மாவட்ட, மாநகர தொண்டரணி தலைவர் ஒருவர், துணைத் தலைவர் ஒருவர் அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர் ஐந்து பேர், ஒன்றிய நகர பகுதி பேரு தொண்டரணி நிர்வாகிகள் அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர் மூன்று பேர் மிகாமல் இருக்க வேண்டிய விதிமுறை உள்ளதால் இதற்கு ஏற்ப பட்டியலை அனுப்புமாறு கோருகிறேன்" என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல யூடியூபரும்  அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரியாணி கடைகளுக்கு ஆபத்து. பாக்ஸிங் தெரிஞ்சவனே லெக் பீஸுக்காக பாக்சிங் பண்ணுவான்" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவருடைய பதிவில் பல்வேறு தரப்பட்ட மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அது தொண்டர் அணி இல்லை குண்டர் அணி என சொல்லுங்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக நிர்வாகிகள் கடந்த காலங்களில் ஹோட்டல்களில் பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அதற்காக தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு விசிட் செய்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK student team admins compulsory known Defense art


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->