தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசிய பாஜகவின் கீழ்த்தர அரசியல் - துரைமுருகன் அறிக்கை .! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி சடங்கு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி. புதுப்பட்டியில் நடைபெற்றது.

இதற்கு முன்பு விமான நிலையத்திற்கு வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதித்துறை அமைச்சர் பிடி. ஆர் பழனிவேல் தியாகராஜன் இறுதியஞ்சலி செலுத்தினார்.

இதை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சரின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு காரணம், "தமிழக அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிற கட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும்" என்று கூறியதால் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழக நிதியமைச்சரின் கார்  மீது காலணி வீசியது பெருங் கண்டனத்திற்குரியது. தேசியக் கொடி ஏற்றிய  காரின் மீது காலணி வீசியிருக்கும் பாஜகவின் கீழ்த்தர அரசியலை மக்கள் உணர்ந்துள்ளனர்.

செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற அசிங்கமான அரசியலை தவிர பாஜகவுக்கு வெறும் ஒன்றும் தெரியாது" என அறிக்கையின் மூலம் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan say about madurai ptr issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->