செய்தியாளர் எழுப்பிய கேள்வி., வருத்தப்பட்டு பின் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் : இன்று காலை கும்மிடிப்பூண்டியில் அதிமுக நிர்வாகி இல்ல காதணி விழா நடைபெற்றது, இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அதன் விவரம் பின்வருமாறு : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து, சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பது காலம் தாழ்ந்த நடவடிக்கை. 

நாங்கள் நீதிமன்றம் சென்ற பிறகுதான் சிபிசிஐடி விசாரணையை நடக்கிறது. அவர்களாக வந்து விசாரணை நடத்தவில்லை. பலமுறை நாங்கள் காவல்துறை புகார் அளித்தோம் அவர்கள் அலட்சிய போக்கின் காரணமாக நீதிமன்றம் சென்று, நீதிமன்றத்தின் மூலமாக இன்று சிபிசிஐடி போலீசார் தடயங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருட்டு சம்பவம் நடந்தால், காவல்துறை தடயங்களை எல்லாம் சேகரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அது நடக்காது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் கிடையாது,

எந்த ஒரு பொருள் திருட்டு போனாலும், அதை முறையாக கண்டுபிடிக்க கூடிய தமிழ் காவல்துறையினர் தமிழகத்தில் இல்லை. அதற்குண்டான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் எடுக்கப் போவதும் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது ஒரு குடும்ப கட்சி. உதயநிதி ஸ்டாலின் எந்த பதவியிலும் கிடையாது. அவர் எம்எல்ஏ மட்டும் தான். அவர் நிகழ்ச்சியின் ஒரு திட்டத்தை துவங்கி வைக்கிறார். 


 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி. ஆகவே இப்போது அதிமுகவை தொண்டர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு (சசிகலா, டிடிவி தினகரன்) இங்கு இடம் கிடையாது. நானும் தொண்டர் என்ற முறையில் தான் வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi K Palanisami Say about ADMK head office case CBCID


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->