இரட்டை இலை சின்னம் முடங்காது... பழனிச்சாமியின் ஆதரவாளர் நம்பிக்கை..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளதால் இடைத்தேர்தலில் போட்டியிட இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. பழனிச்சாமி தலைமையிலான அணியினர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமாகா தலைவர் ஜி.கே வாசனை சந்தித்து அதிமுக போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த நிலையில் அவர் விட்டுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தனர். மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இருப்பினும் இரு அணியினரும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பழனிச்சாமி அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளான கே.பி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அக்கட்சியின் அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. பாஜகவின் நிலைப்பாட்டை அண்ணாமலை அறிவிப்பார் என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமியிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "ஏற்கனவே சொல்லியாச்சு அவர் ஒரு குழப்பவாதி. நாங்கள் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். அவர்தான் குழம்பி போய் உள்ளார். அந்த குழப்பத்தில் தான் அங்காக்கே ஓடிக் கொண்டிருக்கிறார். இரட்டை இலை சின்னம் முடக்க வாய்ப்பே இல்லை" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS supporter hopes double leaf symbol will not freeze


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->