ரூ. 4000 டிக்கெட் விலை ரூ. 80,000.. "வந்தே பாரத்" கருணை காண்பிக்கலாம் அல்லவா..! மதுரை தொகுதி எம்பி ட்விட்..!!
Madurai MP tweets about odisha flight ticket price hike
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயில் மீது மோதியதில் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் தற்போது வரை 275 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 700க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை காண உறவினர்கள் சிறப்பு ரயில்கள் மூலமும், விமானம் மூலமும் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் தங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை... 4000 ரூபா டிக்கெட் 24000 முதல் 80000 ரூபாய் வரை. அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்" என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா! கருணை இல்லா அரசே... உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்!" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Madurai MP tweets about odisha flight ticket price hike