மூத்த தலைவர் என்றும் பாராமல்.. குலாம் நபி ஆசாத்தை.. சரமாரியாக தாக்கிய எம்பி.ஜோதிமணி.!
Mp jothimani Replied to Ghulam nabi azad
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்று, சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் ராஜினாமா கடிதம் எழுதி இருந்தார்.
அதில், குலாம் நபி ஆசாத், "காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை அமைப்பை தகர்த்துவிட்டார் ராகுல் காந்தி. எனவே மிகுந்த வருத்தத்துடன் இந்திய தேசிய காங்கிரஸுடனான எனது அரை நூற்றாண்டு பழமையான தொடர்பைத் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்" என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.
மேலும், குறிப்பாக ஜனவரி 2013க்குப் பிறகு அவர் உங்களால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதும், முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் தகர்க்கப்பட்டது என்று, குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டி இருந்தார்.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் தலைவர் ராகுல் காந்தி குறித்து விமர்சிக்க வேண்டாம். நீங்கள் பல மாநிலத்தின் பொறுப்பில் இருந்தீர்கள். தற்போது அந்த மாநிலத்தின் நிலை என்ன என்பது குறித்து கூற மறந்து விட்டீர்கள். ராகுல் காந்தி துணை தலைவர் பதவி ஏற்பதற்கு முன்பே,. இது அனைத்தும் நடந்தது. தயவுசெய்து கண்ணியத்தோடு வெளியேறுங்கள். கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் உங்களை இன்னும் மதிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mp jothimani Replied to Ghulam nabi azad