'சுதந்திர நாடாக மாற வேண்டும்' நீல பெயிண்டால் வாசகம்.! தமிழகம் அருகே பரபரப்பு - இந்திய இறையாண்மைக்கு தீங்கு - போலீஸ் விசாரணை.! - Seithipunal
Seithipunal


புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரில் 'அன்னையின் கனவு' திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகளுக்கு, ஆரோவில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின் மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரோவில் சர்வதேச நகரம் மையத்தில் அமைந்துள்ள டவுன்ஹால் முகப்பு கட்டிடத்தின் சுவரில் நீல நிற பெயிண்டில் 'ஆரோவில் இப்போது சுதந்திர நாடாக மாற வேண்டும்' என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து பவுண்டேஷன் சார்பில் செயலர் சீனிவாசமூர்த்தி காவல்நிலையத்திற்கு சென்று, இந்திய அரசாங்கத்தை அவமதிக்கும் விதமாக வாசகத்தை எழுதி உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் விழுப்புரம் காவல் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தலைமையில் ஆரோவில் காவல் ஆய்வாளர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Must become an independent country dialog written issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->