சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பிஜேபியின் A & B டீ-முக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை..திமுக விளாசல்!
No confidence motion against the Speaker Trouble between BJPs A & B Team DMK slams
புதுச்சேரியில் புயலால் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு இதுவரை அரசு நிவாரணம் வழங்கவில்லை என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்
கடந்த நவம்பர் 30-ந்தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியதுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதனால் புதுவை நகர், புறநகர், கிராமபுறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தது. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அனைத்து கால்வாய்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 50கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்தன.இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து குடும்ப அட்டைக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை நிவாரணம் அறிவித்தார்.மேலும் மழையால் சேதமடைந்த வீடுகள்,கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவுபிறப்பித்தார்.
இந்தநிலையில் புயலால் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு இதுவரை அரசு நிவாரணம் வழங்கவில்லை என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் .பேரவையில் பேச மறுப்பது, தீர்ப்பில் திருப்தி இல்லை, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேரவையில் இருந்தார், தனிப்பட்ட நபரின் மரபை மீறினால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை தீர்மானத்தை கொண்டு வரலாம் என தெரிவித்த சிவா சபாநாயகருக்கு எதிராக புகார் அளித்துள்ளவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.
பிஜேபியின் A & B டீ-முக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்துள்ளனர்.நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து திமுக வேடிக்கை பார்க்கும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
English Summary
No confidence motion against the Speaker Trouble between BJPs A & B Team DMK slams