இரட்டை இலை சின்னம் யாருக்கு? - தேர்தல் ஆணையம் எடுக்க போகும் முடிவு என்ன? - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று எஸ்.சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் பழனிசாமி பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது. 

அதன் படி பழனிசாமி தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. அதில், சூரியமூர்த்தி அதிமுகவில் அடிப்படை உறுப்பினரே இல்லை. சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கே.சி.சுரேன், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், பழனிசாமிக்கு பதிலாக கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆவணங்களான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், சூரியமூர்த்தி மற்றொரு மனுவை நேற்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார்.

அதில், சிவில் நீதிமன்றம் இன்றளவும் என்னை அதிமுக உறுப்பினர் இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்“ என கோரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petition against double leaf case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->