பஞ்சாப் விவகாரம் : சற்றுமுன் குடியரசு தலைவரை சந்தித்த பிரதமர் மோடி.! காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பொழுது போராட்டக்காரர்கள் திடீரென சாலையை மறித்தனர். 

இதனால் பிரதமர் மோடி 20 நிமிடம் தனது காரில் காத்திருந்து, பின்னர் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று, பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், பஞ்சாப் மாநில பயணத்தின் போது என்ன நடைபெற்றது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்து உள்ள நிலையில், இந்த சந்தித்து நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi Punjab program Cancel issue 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->