வன்னியர் உள் இட ஒதுக்கீடு: காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி போராட்டம்! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பா.ம.க தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசு.

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. ஆனால், 1000 நாட்கள் ஆகியும் அதனை தமிழக அரசு செய்யவில்லை.

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்கனவே உறுதி அளித்த முதல்வர், அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லால் இருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் எனவும் முதல்வர் தற்போது சொல்கிறார். ஒரு சாதாரண ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது இந்த அதிகாரம் என்பது அவருக்கு தெரியாதா" என்று அனபமணி இராமதாஸ் பேசினார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss kanchipuram Vanniyar Reservation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->