ஏன் ஸ்டாலின் இப்படி பயப்புடுகிறார்? திமுக முகமூடியை கிழித்த காங்கிரஸ் - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Caste Census
பாமக நிறுவனர், மருத்துவர் இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆந்திரா, பிஹார், ஒடிசா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். தற்போது, ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்த போறாங்க.
இப்போ தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடங்கிட்டாங்க. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், தமிழக அரசு நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.
திமுக சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு மக்கள் ஏமாற்ற முடியாது. தெலங்கானாவில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிவடைகிறது.
இதற்கான செலவாக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதை ரூ.250 கோடியில் 2 மாதங்களில் முடிக்க முடியும்.
திமுக அரசு தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் அரசிடம் பாடம் கற்றுக்கொள்ளட்டும். காங்கிரசின் ராகுல் காந்தி மற்றும் தெலுங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் செயல் மூலம், திமுக முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தேசிய அளவில் நடத்தப்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்பின் முன்னோடியாக இருக்கும், என தெலங்கானா முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை, முதல்வர் ஸ்டாலின் இனி கைவிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு (தலைமை செயலகம்) போகாத நான் கோட்டைக்கு சென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியிறுத்தினேன். ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Caste Census