திருவண்ணாமலையை திணறடித்த தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாடு: அலை அலையாய் திரண்ட பாட்டாளிகள்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் நேற்று பாமகவின் துணை இயக்கமான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் லட்ச கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவிக்கையில், "தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. 

லட்சக்கணக்கான பாட்டாளிகள் திரண்ட மாநாட்டில் உழவர்களின் கோரிக்கைகள் குறித்து நான் உரையாற்றினேன். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி. வன்னியர் சங்கத் தலைவர் பு.தா, அருள்மொழி, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி, பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இரா.அருள்,  சி.சிவக்குமார், சதாசிவம், மாவட்டச் செயலாளர்கள் முனைவர் கணேஷ்குமார், ஏந்தல் பக்தா, வேலாயுதம், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரை:

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

  1. தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்னைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்!
  2. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!
  3. பாசனத் திட்டங்களை செயல்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!
  4. வேளாண் நிதிநிலை அறிக்கையை பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும்!
  5. உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக, ஏக்கருக்கு ரூ.10000 வழங்கவேண்டும்!
  6. மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும்!
  7. நீர்நிலைகளை தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்!
  8. தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும்!
  9. உழவர்களின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்; வட்டி மானியம் வழங்க வேண்டும்!
  10. நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ,5,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!
  11. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் கொள்முதல் விலை வேண்டும்!
  12. வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்!
  13. வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கவேண்டும்!
  14. பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனிக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்!
  15. மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!
  16. மேகதாது அணை கூடாது – காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்!
  17. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
  18. காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
  19. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
  20. தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்!
  21. தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்!
  22. அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்!
  23. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் பாசனத் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்!
  24. தமிழ்நாடு மாநில வேளாண்மை கொள்கையை உருவாக்கி வெளியிட வேண்டும்!
  25. தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கூடாது!
  26. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் நீரை திறக்க வேண்டும்!
  27. வீராணம் ஏரியின் கொள்ளளவை 2 டிஎம்சியாக உயர்த்த வேண்டும்!
  28. மதுராந்தகம் ஏரியை சீரமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்!
  29. காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
  30. நந்தன் கால்வாய்த் திட்டம் மற்றும் தென்பெண்ணை – துரிஞ்சலாறு இணைப்பை செயல்படுத்த வேண்டும்!
  31. காவிரி, கொள்ளிடத்தில் மணல் குவாரிகளை மூடி, தடுப்பணைகளை அமைக்க வேண்டும்!
  32. பாலாற்றில் குறைந்தது 25 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்!
  33. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் – கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
  34. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்!
  35. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்!
  36. சென்னை அருகே அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!
  37. தொழில், வணிகத் திட்டங்களுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை தமிழ்நாடு அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்!
  38. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்!
  39. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்!
  40. விளைநிலங்களில் கருவேல மரங்களை அகற்ற அரசு மானியம் வழங்கவேண்டும்!
  41. நீரா பானத்தை வணிக அடிப்படையில் விற்பனை செய்ய திட்டம் வகுக்க வேண்டும்!
  42. நியாயவிலைக் கடைகளில் நாட்டு சர்க்கரை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்!
  43. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும்; தமிழக விவசாயிகளிடம் ரூ.60 என்ற விலையில் செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்!
  44. திருமண்டங்குடி கால்ஸ் சர்க்கரை ஆலை, போளூர் தரணி சர்க்கரை ஆலை ஆகியவை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!
  45. திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேருக்கு இரங்கல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Tamilnadu Uzhavar Periyakka Maanadu Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->