தாயின் சாதிச்சான்று அடிப்படையிலும் சாதிச்சான்று - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட புதுவை முதல்வர் ரங்கசாமி.!
Puducherry mother side community certificate
கணவரை இழந்தோ, பிரிந்தோ வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு தாயின் வழி அடிப்படையில் சாதிச் சான்று தர, மத்திய அரசிடம் கோர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு தெரிவித்ததாவது, "புதுச்சேரியைச் சேர்ந்தோர் தற்காலிகமாக வெளியூர் சென்று படித்துத் திரும்பினால்கூட குடியிருப்பு சான்று கிடைப்பதில்லை.
இந்த நிலையில், கணவரை இழந்தோ, பிரிந்தோ வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு தாயின் சாதிச் சான்று அடிப்படையில் சாதிச் சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்ததாவது, "5 ஆண்டுகள் புதுச்சேரியில் இருந்தால் குடியிருப்பு சான்று தரப்படும். தற்காலிகமாக படிக்க வெளியூர் சென்றாலும் குடியிருப்பு சான்று தரப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சாதிச் சான்றிதழ், தந்தையின் சாதிச் சான்று அடிப்படையில் தான் தரப்படுகிறது.
கேரள மாநிலத்தில் தற்போது தந்தையின் சாதிச் சான்று மட்டுமில்லாமல், தாயின் சாதிச் சான்று அடிப்படையிலும் சாதிச் சான்று தரப்படுகிறது. இது குறித்து மத்திய அரசிடம் கோரி ஆய்வு செய்து தாயின் சாதிச் சான்று அடிப்படையில் சாதி சான்றிதழ் தரப்படும்" என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Puducherry mother side community certificate