முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த சம்பவம்... சற்றும் எதிர்பாராத ஆர்.என் ரவி... முதல் நாளே அனல் பறந்த சட்டப்பேரவை..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கம் போல் ஆளுநர் உரை இடம்பெற்று இருந்தது. அண்மையில் தமிழக ஆளுநர் ரவி பேசிய சில கருத்துக்களால் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதனால் சற்று கோவம் அடைந்த ஆளுநர் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது உரையை தொடங்கினார். 

அப்பொழுது தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் பாதி பகுதியை மட்டுமே ஆளுநர் ரவி படித்ததாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அனைத்து குறிப்புகளையும் பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி இருக்கும்போதே தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கடுப்பான ஆளுநர் ரவி முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் வெளியேறினார்.

சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய ஆளுநரை தடுக்கவோ சமாதானம் செய்யவோ அரசு தரப்பில் இருந்து யாரும் முன் வரவில்லை. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் வெளியேறிய நிகழ்வு சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஆளுநரை அவமரியாதை செய்து விட்டதாக பாஜக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர். அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்றதால் சட்டப்பேரவையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர்களை முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்து அமர வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rn Ravi left from tnassembly after passing resolution against him


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->