பள்ளி சிறுமியை கர்ப்பமாக்குவேன் என்று கூறினால், 3 மணிநேரத்தில் ஜாமீன் கிடைக்கும் - தமிழக காவல்துறை.!  - Seithipunal
Seithipunal


"பால்வாடி படிக்கும் பொழுது குச்சி மிட்டாய் கொடுத்து, எட்டாம் வகுப்பு பாஸ் ஆனதும் வாந்தி எடுக்க வைத்தால் தான் என்ன விட்டு அந்த பெண் போக மாட்டா" என்று ஒருத்தன் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்குவேன் என்று ஒருத்தன் இப்படி பாடும் இந்த வீடியோ தமிழக மக்களை கொந்தளிக்க வைத்தது. 

இதனை கண்ட, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.வருண் குமார் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இவனை தெரிந்தால் சொல்லுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், நேற்று இரவு இந்த பாடலை பாடிய 'சரவெடி சரணை' சென்னை செம்பியம் பகுதியில் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக சித்தரிக்கும் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் இரண்டு மணிநேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுரை வழங்கி, அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். மேலும், சரவெடி சரணிடம் மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொண்டு, காவல் நிலைய பிணையில் விடுதலை செய்து உள்ளனர்.

சரவெடி சரணை கைது செய்தும், சிறைவைக்கப்படாமல் மொத்தமாக ஒரு 3 மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆக, பள்ளி சிறுமியை கற்பமாக்குவேன் என்று கூறினால், தமிழக காவல்துறையின் தண்டனை இவ்வளவுதான் என்று தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

ஒருவேளை பள்ளி சிறுமியை கற்பழிப்பேன் என்று கூறினால் தமிழக காவல்துறை சார்பாக பதக்கம் கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல என்று தமிழக மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

கடந்த 35 நாட்களில் கோவை, கரூர், சென்னையை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saravadi saran arrest issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->