ஸ்கூல் பசங்க சரக்கு அடிச்சா நான் பொறுப்பா? - செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள  செந்தில் பாலாஜி குறித்து, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்க்) தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பல கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

அதில் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும், டாஸ்மாக் பார்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், பாலி மாணவர்கள் குடித்து சீரழிவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு நிர்மல் குமார் விமர்சித்து இருந்தார்.

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, 'தன்னை பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மாணவ, மாணவிகள் மது அருந்துவற்கு அமைச்சர் பொறுப்பேற்க முடியாது என்று, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ராமமூர்த்தி அவர்கள், பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கு அமைச்சர் எப்படி பொறுப்பாகாமல் இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அமைச்சர் தரப்புக்கு குட்டு வைத்தார். 

இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji Case Chennai HC 4123


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->