"இப்போ நினைச்சாலும் நடுங்குது.. மேலும், 5 லட்சம் நிதியுதவி" முதல்வர் முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கிசூடு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையில் தான் முடிந்தது. இந்த வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்:

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த ஆணையம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்தது. 

கூடுதலாக 5 லட்சம் நிதி உதவி:

இது குறித்த ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 13 பேரின் குடும்பத்திற்கு ஏற்கனவே நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக வரலாற்றில் கரும்புள்ளி:

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்பு கொண்டுள்ள அதிகாரிகள், முன்னாள் ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைவரரின் மீதும் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

அத்துடன், "தமிழக வரலாற்றில் துப்பாக்கி சூடு சம்பவம் மிகப்பெரிய கரும்புள்ளி. அந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்தால் கூட உடல் நடுங்குகின்றது." என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin alert fund for tuticorin gun shoot issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->