மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கும் இந்த பாவம் சும்மா விடாது - ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டுள்ளார். 

இதன் பின்னர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்திருப்பதாவது,

"தமிழகத்தில் ஆளுநருக்கும், காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவலரை தாக்கியுள்ளனர். ராயபுரத்தில் காவலர் ஒருவரை இழிவாகப் பேசியுள்ளனர். தவறு செய்வோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். 

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த வழக்கை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். உரிய நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே லாக்கப் மரணங்களை தடுக்க முடியும். 

தமிழகத்தில் செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு, மத்திய அரசின் மீது அரசு பழி போடுவது நியாயமல்ல. 2113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கும் இந்த பாவம் சும்மா விடாது." என்று டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t jeyakumar say about power cut issue april 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->