திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்ற பிரச்சனைக்கு சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில், "திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

எனவே முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.

எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தக் கடிதத்தில் நவாஸ் கனி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupurangundram issue CM Stalin navaskani mp letter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->