விஜயின் நீட் தேர்வு பேச்சு குறித்து செல்வப்பெருந்தகை கருத்து..! - Seithipunal
Seithipunal



தளபதி விஜயின் தவெக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் இன்று இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து இன்று விஜய் பேசினார். இந்த தேர்வால் கிராமப் புற மற்றும் பிறப்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர் என்றும் , மேலும் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார். 

இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதாக உள்ளது. 

ஆகையால் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களின் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். அவரது கருத்தை தான் தவெக தலைவர் விஜய் பிரதிபலித்துள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம். பாசிச ஆட்சி நடத்தும் பாஜக மட்டுமே தனிமையில் உள்ளது என்பதை விரைவில் அவர்கள் உணர்வார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Congress Leader Selaperunthagai Says About Vijays NEET Exam Speech


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->