திருச்சி || 2 மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று, சூதாட்டம் ஆடிய தந்தை அப்துல் சலாம் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே 2 மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை அப்துல் சலாம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அப்துல் சலாமின் நண்பர் ஆரோக்கியராஜ், குழந்தையை விலைக்கு வாங்கிய சந்தனகுமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், உறையூர் கீழ பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம், இவருக்கு 5 குழந்தை உள்ளது. இவரின் ஐந்தாவது குழந்தையான இரண்டு மாத ஆண் குழந்தையை, கடந்த 2 மாதத்துக்குமுன் (குழந்தை பிறந்த சில தினங்களில்) தொட்டியம் பகுதியை சேர்ந்த சந்தன குமாருக்கு அப்துல் சலாம் விற்பனை செய்துள்ளார்.

இதற்க்கு, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மூலம் அப்துல் சலாம் இந்த குழந்தையை விற்பனை செய்திருக்கிறார். இந்த குழந்தையை விற்ற 80 ஆயிரம் ரூபாய் பல தவணைகளாக அப்துல் சலாம் பெற்றுள்ளார். 

எனக்கு என் குழந்தை வேண்டும் என்று, குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த இரண்டு மாத குழந்தையை அப்துல் சலாம் கடன்தொல்லை காரணமாகவும், சூதாட்டம் ஆடுவதற்காகவும் விற்றுள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy 2month baby sale issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->