செஸ் போட்டியில் நீங்களும் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்!...இதோ துணை முதலமைச்சர் வெளியிட்ட முழு விவரம்!
You too can become a grand master in the chess match here is the full details released by the deputy chief minister
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நவம்பர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ தமிழ்நாடு விளையாட்டு துறை பெருமையுடன் அறிவிக்கிறது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024, நவம்பர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.
இதில் சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுவார்கள், அவர்களின் விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
சதுரங்க ஆர்வலர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ₹100 செலுத்தி தங்கள் இருக்கைகளைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், இதற்காக டிக்கெட்டுகளை புக் மைசோ-வில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரம் பரபரப்பான செஸ் போட்டிகளில் எங்களுடன் சேருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
You too can become a grand master in the chess match here is the full details released by the deputy chief minister