தை பிறந்தால் வழி பிறக்கும்.. பொங்கல் வைக்க உகந்த நேரம்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்:

தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட நல்ல நேரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

தைப்பொங்கல் :

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கை தெய்வத்திற்கும், சூரியன், கால்நடை உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையாகும்.

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம்

காலை 06.00 முதல் 09.00 வரை

பகல் 01.55 முதல் 02.25 வரை

மாலை 05.46 முதல் 06.46 வரை
உழவர் திருநாள்ஃமாட்டுப் பொங்கல் :

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம்

காலை 06.55 முதல் 08.20 வரை

காலை 11.16 முதல் 01.55 வரை

மாலை 05.46 முதல் 08.16 வரை
பொங்கல் பண்டிகையை உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 pongal Time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->