பிரதோஷம் , அமாவாசையை ..சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி! - Seithipunal
Seithipunal


பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சதுரகிரியில் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

மதுரை மாவட்டம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.சில நேரங்களில் மலைப்பகுதியில் மழை பெய்தால் மலையேறி சாமி தரிசனம் செய்ய புதர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். 

இந்தநிலையில் இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். மலையேறும் பக்தர்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PradoshamAmavasya Permission to visit Sathuragiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->