தினம் ஒரு திருத்தலம்..அமாவாசை தினத்தில் கிரிவலம்..அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில்.!
Today special Anjaneyar kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பெரணமல்லூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. பெரணமல்லூரிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மலைகளும், வயல்களும் சூழ்ந்த இயற்கையான சூழலில் கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெறுகின்றது.
இத்திருக்கோயிலில் மூலவரான ஆஞ்சநேயர் சிறுகுன்றின்மேல் பிரதிஷ்டை செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் சன்னதிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவர். அதே போல் சிறுகுன்றின்மேல் வீற்றிருக்கும் வரதஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி தினத்தன்று சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்திருக்கோயிலில் முக்கியமாக அமாவாசை நாளில் இங்கே கிரிவலம் வந்து அனுமனை வணங்கிச் சென்றால் மன தைரியம் கூடும் என்பது நம்பிக்கை.
சனி தோஷங்கள் விலகவும், திருமணம் கைகூடவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரவும் அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டியவை நிறைவேறியவுடன் வரதஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றியும், அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Anjaneyar kovil