45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி!
45th Chess Olympiad Indian players win first round
ஹங்கேரிய நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஓபன் பிரிவு முதல் சுற்றில் இந்தியா 4-0 என்ற கணக்கில் ஹங்கேரியை முற்றிலுமாக வீழ்த்தியது. அந்த வகையில் ஆா்.பிரக்ஞானந்தா – திஸ்ஸிா் முகமதையும் (1-0), விதித் குஜராத்தி – ஆகிா் மெஹதி பியரெவையும் (1-0), அா்ஜுன் எரிகைசி – எல்பிலியா ஜேக்ஸையும் (1-0), பி.ஹரிகிருஷ்ணா – மோயத் அனாஸையும் (1-0) வீழ்த்தினா்.
மேலும் இதேபோல், மகளிா் பிரிவு முதல் சுற்றில் இந்தியா 3.5 – 0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை வென்றது. அதன்படி, ஆா்.வைஷாலி – அடானி கிளாா்கையும் (1-0), திவ்யா தேஷ்முக் – ரேச்சல் மில்லரையும் (1-0), தானியா சச்தேவ் – கேப்ரியேலா வாட்சனையும் (1-0) வீழ்த்தினா். ஆனால், வந்திகா அகா்வால் மட்டும் ரெஹானா பிரௌனுடன் டிரா (0.5-0.5) செய்தாா்.
முதல் சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா உள்ளிட்ட 56 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல்நிலையில் உள்ள நிலையில், மகளிா் பிரிவில் இந்தியா உள்பட 6 அணிகள் தலா 3.5 புள்ளிகளுடன் 73வது நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
45th Chess Olympiad Indian players win first round