வச்சு செய்த கனமழை! இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்! ஆனால் நாளை தொடரும்!
India innings continue on to the reserve day tomorrow
ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர்-4 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறிய ஸ்ரேயர்ஸ் ஐயருக்கு பதிலாக கே.எல் ராகுல் உடன் கடந்த போட்டியில் பங்கேற்ற அதே அணி இந்த போட்டியிலும் களமிறங்கியது.
இந்திய அணி தனது முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 121 நாட்கள் குவித்த நிலையில் அடுத்தடுத்து ரோகித் சர்மா மற்றும் ஹூப்மன் கில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் 24 ஆவது ஓவரின் முதல் பந்தை பாகிஸ்தான் அணி வீச அதனை மழை எதிர்கொண்டது. இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்ததால் இரு அணி தரப்பிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி 8 மணி அளவில் அனைத்து தார்பாய்களும் நீக்கப்பட்டு ஆடுகளத்தை தயார் செய்யும் பணி நடைபெற்ற போது மீண்டும் கன மழை தொடர்ந்தது. இதனால் இன்றைய ஆட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக நாளை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி தனது ஆட்டத்தை நாளை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India innings continue on to the reserve day tomorrow