கே.எல் ராகுலுக்கு உண்மையிலேயே பெரிய மனசு தான்!டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும் தியாகியாக மாறிய கே.எல் ராகுல்.. – விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த கே.எல். ராகுல், 2023 ஐபிஎல் தொடருக்குப் பிறகு அந்நணியால் விலக்கப்பட்டார். லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஒரு போட்டியின் போது மைதானத்திலேயே அவரை கடுமையாக விமர்சித்தது, இருவருக்குமான உறவைக் குலைத்துவிட்டது. இதன் விளைவாக, லக்னோ அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ராகுல், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்டார்.

டெல்லி அணிக்காக கேப்டனாக இருப்பாரா?

டெல்லி அணியில் தற்போது பெரிய அனுபவம் கொண்ட வீரர்கள் இல்லாததால், அவருக்கு கேப்டன்சியை வழங்க முன்வந்தது அணியின் நிர்வாகம். ஆனால், தான் ஒரு வீரராக மட்டுமே விளையாட விரும்புவதாகவும், கேப்டன் பதவி வேண்டாம் என்றும் ராகுல் நிராகரித்தார்.

டெல்லியில் மிடில் ஆர்டரில் விளையாடும் ராகுல்!

 ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடப் போகிறார்!
 கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக மட்டுமே விளையாடிய ராகுல்,
 டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் காரணமாக அந்த இடத்தில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
 ஜேக் பிரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரல் போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் இருப்பதால், அனுபவம் வாய்ந்த வீரர் தேவைப்படுகிறது.
 ஹாரி புரூக் 2 ஆண்டு ஐபிஎல் தடைக்கு உள்ளாகியுள்ளதால், ராகுலின் இடமாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ராகுலின் மிடில் ஆர்டர் புள்ளிவிவரங்கள்

 மொத்தம் – 33 போட்டிகளில் மட்டுமே துவக்க வீரராக இல்லாமல் விளையாடியுள்ளார்.
 அந்த போட்டிகளில் 500 ரன்கள் குவித்து, 29 ரன் சராசரியுடன் விளங்கியுள்ளார்.
 ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை –

  • 123 போட்டிகள்
  • 4,683 ரன்கள்
  • சராசரி – 45 ரன்கள்

இந்த மாற்றம் டெல்லி அணிக்கு சாதகமாக அமையுமா? இல்லை ராகுல் தன்னுடைய பழைய பிளேயிங் ஸ்டைலில் திரும்புவாரா? என்பதை எதிர்பார்த்து பார்ப்போம்! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KL Rahul truly has a big heart KL Rahul became a martyr for the Delhi Capitals team too Here are the details


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->