கிரிக்கெட்டில் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கும் இந்தியாவின் மூத்த வீரர்! தேடி வந்த வாய்ப்பு!
கிரிக்கெட்டில் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கும் இந்தியாவின் முகம்மது கைப்! தேடி வந்த வாய்ப்பு!
உலகம் முழுவதும் நடைபெறும் 20 ஓவர் போட்டி தொடரின் முன்னோடி இந்தியாவின் ஐபிஎல் தொடர். ஐபிஎல் தொடரின் 12-வது சீசனுக்கான பணிகளை 8 அணிகளும் முழு மூச்சுடன் செய்து வருகின்றன. கடந்த 2018-ஐ விட 2019 இல் சிறப்பாக விளையாடும் வகையில் வீரர்களை தக்கவைத்துக் கொள்வது, வீரர்களை அணிமாற்றுவது , பயிற்சியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தலைமை பயிற்சியாளரை நீக்கியுள்ளது. ஆலோசகரான ஷேவாக்கை நீக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சீசனில் சொதப்பிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி அணிக்கு புதிய பயிற்சியாளரை கொண்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப்-ஐ புதிய துணைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார்.

முகமது கைஃப் ஐபிஎல்லில் பணியாற்றுவது இது முதல்முறையல்ல அவர் 2017-ல் குஜராத் லயன்ஸ் அணியில் துணைப் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். முகமது கைஃப் இந்திய அணிக்காக 125 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வருகைக்கு பின்னர் இந்திய அணியின் பீல்டிங் வேறு லெவலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
mohammad kaif appoint assistant coach to DD in ipl2019