இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நமீபியா! - Seithipunal
Seithipunal


உலக கோப்பையின் முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்த இலங்கை! 

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டி இன்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 12க்கு நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள நான்கு அணிகளை தேர்வு செய்ய முதல் சுற்று போட்டிகள் இன்று துவங்கியது.

முதல் சுற்று போட்டியில் எட்டு அணிகள் விளையாட உள்ளன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எட்டு அணிகளில் ஏ-பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பி-பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே என பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.. இன்று துவங்கிய முதல் போட்டியில் இலங்கை அணி நமீபியா அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நமீபியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.2வது ஓவரில் நமீபியா அணி 93 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல் ரவுண்டர் ஜான் பிரைங்கிளின் மற்றும் ஜே.ஜே.ஸ்மித் இணை 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜான் பிரைலிங்க் 28 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். ஜே.ஜே ஸ்மித் 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் களை இழந்து 163 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதுசூதன் 37 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி நமீபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19வது ஓவர் முடிவில் அனைத்து விக்கட்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் தசூன் சனக்கா 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். நமீபியா அணி தரப்பில் டேவிட் வெஸ்சி, பெர்னண்ட் ஸ்கால்ட்ஸ், பென் சிகோங்கோ, ஜான் பிரைலிங்க் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை  நமீபியா அணி வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namibia won by 55 runs against Sri Lanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->