பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற குஜராத்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனின் 16வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து, ஜானி பேர்ஸ்டோவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் அடிக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், தவான் - லிவிங்ஸ்டன் இருவரும் ரன்களை சேர்க்க தொடங்கினார். லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவான் நிதானமாக விளையாடினார். தவான் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதுவரை தொடர்ந்து ஷாருக்கான் 15 ரன்களில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி ஆல் அவுட்-ஐ நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் களமிறங்கிய  ராகுல் சஹார் - அர்ஷ்தீப் சிங் சிறப்பாக விளையாடினர். ராகுல் சஹார் 14 பந்துகளில் 22 ரன்னும், அர்ஷ்தீப் சிங் 5 பந்துகளில் 10 ரன்னும் எடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்களை எடுத்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில்லுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்துகளை சிறப்பாக எதிர் கொண்டதால் இறுதியில் 12 பந்துகளில் 32 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. அப்போது ரபாடா வீசிய பந்தில் சுப்மன் கில் அவுட்டானார். சுப்மன் கில் 59 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அட்டமிழந்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இறுதியில் 6 பந்துகளில் 19 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் தெவாட்டியா களத்தில் இறங்கினார். அதன் பிறகு ராகுல் தெவாட்டியா ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுக்க மில்லர் பவுண்டரி விளாசினார். இறுதியில் 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மில்லர் சிங்கிள் எடுக்க, ராகுல் தெவாட்டியா சிக்சர் விளாசினார். இறுதியில் ஒரு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் சிக்ஸர் விளாசி ராகுல் தெவாட்டியா குஜராத் அணி வெற்றி பெற செய்தார். 

இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை குஜராத் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PBKS vs GT Match GT Win


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->