INDvsSA : 'DO IT FOR DRAVID' ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக்!  - Seithipunal
Seithipunal


ராகுல் சரத் டிராவிட்  குறித்து 'DO IT FOR DRAVID' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்றும், மற்றவர்களுக்காக ஒரு செயலை செய்வதை, தன்னுடைய நம்பிக்கை தன்மைக்கு எதிரானதாக கருத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துடுப்பாட்டப் பயிற்சியாளர் ராகுல் சரத் டிராவிட் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவர் ஆண்கள் தேசிய அணிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவரது பயிற்சியின் கீழ் விளையாடிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும், 2018-ஆம் ஆண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தது.  இவர், பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24,177 ஓட்டங்கள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து, ராகுல் சரத் டிராவிட் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், ராகுல் சரத் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று 'DO IT FOR DRAVID' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இது குறித்து ராகுல் சரத் டிராவிட் தெரிவிக்கையில், "தனிப்பட்ட ஒரு நபருக்காக இதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது. இது போன்ற செயல்களில் எனக்கு விருப்பம் இல்லை. மற்றவர்களுக்காக ஒரு செயலை செய்வதை, நான் என்னுடைய நம்பிக்கை தன்மைக்கு எதிரானதாக கருதுகிறேன். 

எவெரஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும்? என்று கேட்டதற்கு, எவெரஸ்ட் சிகரம் என்று ஒன்று உள்ளது. அதில் ஏறப் போகிறேன். அவ்வளவுதான். என்று ஒருவர் சொன்னதாக கேள்வி பட்டுள்ளேன். இதேபோன்று தான் உலக கோப்பை என்று ஒன்று உள்ளது. அதை வெல்ல விரும்புகிறேன். அவ்வளவுதான்". இவ்வாறு ராகுல் சரத் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 WC 2024 INDvsSA DO IT FOR DRAVID


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->