சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் இந்திய அணி..!
The Indian team with the Pakistan name engraved jersey in the Champions Trophy series
பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்.19-இல் தொடங்குகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளனர்.

இந்திய அணி, பாதுகாப்பு காராணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த்துள்ளது. ஆகையால், இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெற உள்ளது. இந் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை வீரர்கள் அணிந்தபடி இருக்கும் போட்டோக்களை ஐ.சி/சி., வெளியிட்டு உள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, அர்ஷதீப் சிங் ஆகியோர் ஜெர்சி அணிந்திருக்கும் போட்டோக்கள் ஐ.சி.சி., எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. முதலில் பாகிஸ்தான் இலச்சினையை போட இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று அறிவிக்கப்பட்ட தருணத்தில், அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை வீரர்கள் அணிந்துள்ளனர். ஐ.சி.சி., விதிகளை கடைபிடிப்போம் என்று பி.சி.சி.ஐ., தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Indian team with the Pakistan name engraved jersey in the Champions Trophy series