#BREAKING || தமிழகம் முழுவதும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விவரம் இதோ..!!
11 IAS officers transferred by TamilNadu govt
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பதவி ஏற்றதை அடுத்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி,
1) உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் நகராட்சி நிர்வாக துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) பாடநூல் கழக இயக்குனராக இருந்த இளம்பகவத் ஐஏஎஸ் மகளிர் உதவித் தொகை திட்ட சிறப்பு ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) கால்நடை துறை செயலாளராக இருந்த கார்த்திக் ஐஏஎஸ் உயர் கல்வித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ் கால்நடை துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக இருந்த ரீட்டா ஹரீஷ் தாகூர் ஐஏஎஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார.
6) சென்னை மாநகராட்சியில் கூடுதல் வருவாய் ஆணையராக இருந்த விசு மகராஜன் ஐஏஎஸ் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை மேலான் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7) நாகர்கோயில் நகராட்சி ஆணையராக இருந்த ஆனந்த் மோகன் ஐஏஎஸ் சென்னை மாநகராட்சியின் கூடுதல் வருவாய் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8) சென்னை கன்னியாகுமாரி தொழில் வரி வழிதடத்தின் திட்ட இயக்குனர் அண்ணாதுரை ஐஏஎஸ் நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9) நுகர் பொருள் வாணிப கழகத்தின் தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் சென்னை கன்னியாகுமரி தொழில் வரி வழித்தடத்தின் திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10) ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருக்கும் அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மருத்துவர் பணியாளர்கள் தேர்வு குழு வாரியத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11) கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக இருக்கும் சுப்பையன் ஐஏஎஸ் அவர்களுக்கு கூடுதலாக கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
11 IAS officers transferred by TamilNadu govt