நாங்கள் அம்பேத்காரின் பிள்ளைகள்! மீண்டும் 100 வருடங்கள் பின்னாடி போய்விட்டோம் - நடிகர் தீனா!
Actor Deena paid tribute to Armstrong body
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நடிகர் தீனா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தீனா தெரிவித்ததாவது, எங்களின் பூர்வ குடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இழப்பு எங்களால் ஈடு செய்ய முடியாதது.
எங்கள் அண்ணனை இழந்த போது மீண்டும் 100 வருடங்கள் பின்னாடி சென்றது போல் எங்களுக்கு பயமாக உள்ளது. நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் எங்களுக்கு ஜாதி மதம் இனம் எதுவும் கிடையாது.
எங்களுக்கு மனிதநேயம் மட்டுமே உள்ளது. மனிதர்களை மட்டும் தான் பார்ப்போம். எந்த அடையாளம் இல்லாத மனிதர்களாக ஆசைப்படும் மக்கள் நாங்கள். இது அம்பேத்கர் சொன்ன வார்த்தை.
எங்களை பார்ப்பவர்கள் தான் எங்களை ஜாதியாக அடையாளப்படுத்துகிறார்கள். எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்து மனிதரை நாங்கள் இழந்து உள்ளோம் என்று உருக்கமாக தெரிவித்தார்.
English Summary
Actor Deena paid tribute to Armstrong body