கூட்டணியை நம்பி இல்லை... யார் வந்தாலும்.. - இபிஎஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை வெளியிட்டார். 

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. 

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெறும். 

மக்களவைத் தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK eps speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->