அந்த மூவருக்கு மட்டும் கதவு திறக்காது - இழுத்து மூடிய அதிமுக! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்க்கு அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ராஜ் சத்யன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கழக கோயிலாம் தலைமைக் கழகத்தை எட்டி உதைத்தது பெருந்தன்மையா?

அம்மா அவர்கள் இருந்த அறை உட்பட அனைத்து அறைகளையும் சூறையாடியது பெருந்தன்மையா? தலைமைக் கழகத்தின் கோப்புகளை திருடிச் சென்றது பெருந்தன்மையா?

இருபெரும் தலைவர்கள் காத்திட்ட இயக்கத்தையும் இரட்டை இலையையும் முடக்க நீதிமன்ற-தேர்தல் ஆணையப் படிகளை நாடியது பெருந்தன்மையா?

இன்றும் கழகத்தை அழிக்கும் நோக்கத்துடன் பிரிவினைவாத  சக்திகளின் கைப்பாவையாய் இருப்பது பெருந்தன்மையா?

தங்கள் சுயநலத்திற்காக கழக தொண்டர்களை வஞ்சிக்க துணிந்த நீங்கள், பெருந்தன்மை என்ற சொல்லை உச்சரிக்கலாமா?

சென்றவர்களில் குறிப்பிட்ட நீங்கள் மூவரைத் தவிர யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எம்ஜிஆர் மாளிகைக்கு மீண்டும் வரலாம் கழக பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்.

இறந்த கால நிகழ்வுகளாலும், கழகத்தின் எதிர்காலத்திற்காண தீர்க்கமான முடிவுகளாலும் வடிவமைக்கபட்ட பெருந்தன்மை இது …. இதற்கு மேல் அநாவசியம்" என்று ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Sathayan Condemn to OPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->