அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்! கஞ்சா விற்பனை - திமுக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


சேலம் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், திமுகவை சேர்ந்த சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சியின் 55 வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவரான சதீஷ், திமுக நிர்வாகி என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சதீஷ் உள்ளிட்ட ஒன்பது பேரை அதிமுக பிரதமர் கொலை வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோதும், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள், அவரின் உடலை எடுக்க விடாமல் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்ததை அடுத்து சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

இதற்கிடையே அதிமுக நிர்வாகி கொலை படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை அதிமுக பலமுறை சுட்டிக்காட்டியும், முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், திமுக நிர்வாகி சதிஷ் உள்ளிட்ட எட்டு பேரை சற்று முன்பு போலீசார் கைது செய்துள்ளனர். 

கஞ்சா விற்பனையில் திமுக நிர்வாகி சதிஷ் ஈடுபட்டு வந்ததாக அதிமுக நிர்வாகி சண்முகம் போலீசில் புகார் அளித்ததாகவும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Shanmukam murder case Police Investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->