மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு 6% வட்டி! விவசாய மக்கள் வாங்கும் நகை கடனுக்கு 11% வட்டி! - Seithipunal
Seithipunal


வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அதிக வட்டி! வட்டி விகித ஏற்றத்தாழ்வால் பாதிக்கும் நடுத்தர மக்கள்!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது நிர்வாகி பேசியதாவது "அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில் இரண்டு அடுக்கு முறையில் நகை கடன் வழங்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் நபார்டு வங்கியில் இருந்து குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி கூட்டுறவு வங்கிகள் குறிப்பிட்ட அளவு வட்டி சேர்த்து நேரடியாக தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு வழங்குகின்றன.

இதன் காரணமாக வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மூன்று அடுக்கு முறை பின்பற்றப்படுவதால் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. நபார்டு வங்கியில் இருந்து 6% வட்டிக்கு கடன் பெறும் கூட்டுறவு வங்கிகள் மாவட்ட வங்கிக்கு 8% கடன் தருகின்றன. அதிலிருந்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 8.5% வட்டிக்கு அனுப்பப்படுகிறது. மூன்றாவது அடுக்கில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 9.5% வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. 

இறுதியாக வாடிக்கையாளர்களுக்கு 11% வட்டியில் நகை கடன் வழங்கப்படும். தேசிய வங்கிகளில் இதில் பாதி அளவு வட்டியே பயிருக்கான நகை கடனாக வழங்கப்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகபட்சமாக 3 லட்சம் வரையிலான நகை கடனுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் 10 சென்ட் வீட்டு மனையை காண்பித்தால் கூட கடனை வழங்குகின்றனர்.

ஆனால் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 ஏக்கர் நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல், பயிர் சாகுபடி குறித்த தகவல் தந்தால் மட்டுமே பயிருக்கான நகை கடனாக 3 லட்சம் வரை குறைந்தபட்டிக்கு வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறிய நகைகளை வைத்தும் கூட கடன் பெறலாம்.

ஆனால் வட்டி விகிதம் அதிகம் என்பதால் மக்கள் அடகு கடைகளுக்கு செல்கின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்தது ஒரு சவரன் அளவுக்கு இருந்தால் மட்டுமே நகை கடன் பெற முடிகிறது. அங்கே வட்டி விகிதம் குறைவு என்பதால் வட்டிக்கு விடுபவர்களும் அங்கே நகை வைக்க சென்று விடுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் மட்டும் தான். எனவே அரசு இரண்டு அடுக்கு முறையை கொண்டு வர வேண்டும். பயிருக்கான நகைக்கடன் வீதிமுறையை தளர்த்த வேண்டும்" என அரசுக்கு கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agricultural Co operative Credit Union to change three tier interest rate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->