மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்.!
annamalai rrquest vacancy fill in electricity boards
மின்வாரியத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.
மின்சார வாரியம் தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் பொதுமக்களிடம், ரூ.100 - ரூ.150 என கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதமானது.

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மின்சாரப் பராமரிப்பு தொடர்பான பணிகள் அதிகரிக்கும். தற்போதும் பணி நியமனம் மேற்கொள்ளவில்லையென்றால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
தேர்தல் வாக்குறுதியில், 3 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பப்படும், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று இளைஞர்களை ஏமாற்றி, மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்று பொதுமக்களையும் ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, எப்போதும், காலம் கடந்துதான் புத்தி வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
annamalai rrquest vacancy fill in electricity boards