மீண்டும் பணி கோரி சட்டசபையை முற்றுகையிட முயற்சி.. போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு.. பரபரப்பு!
Attempt to lay siege to the Assembly demanding work again Clashes between the police Haste
மீண்டும் பணி வழங்க அரசாணை வெளியிடக்கோரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர்புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் புதுச்சேரி & காரைக்காலை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி அரசின் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்களை நியமித்தது அப்போதைய என் ஆர் அரசு. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை நீக்கியதாக சொல்லி அனைத்து ஊழியர்களையும் பொதுப்பணித்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
அன்று முதல் சுமார் 8 ஆண்டு காலமாக மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல கட்ட போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு. அதன் பலனாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அரசாங்கம் மீண்டும் வேலை வழங்கி மாதச் சம்பளம் ஆக ரூபாய் 10 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்கள்.
அவர்கள் அறிவிப்பு செய்து சுமார் 20 மாதங்கள் ஆகிறது.அனால் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் ,அரசாணை வெளியிட கோரியும்,புதுச்சேரி அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி சட்டசபை நோக்கி பேரணி நடத்தினர்.அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடி மீண்டும் பணி வழங்க அரசாணை வெளியிடக்கோரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் புதுச்சேரி & காரைக்காலை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
English Summary
Attempt to lay siege to the Assembly demanding work again Clashes between the police Haste