பிக் பாஸ் 8 தமிழ் : வைல்டு கார்டில் மீண்டும் வீட்டிற்குள் வரும் சாச்சனா? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கோலாகலமாக கடந்த  தொடங்கி ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பல்வேறு போட்டியாளர்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரவேற்று பிக் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.  

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா என்பவர்,  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.  தொடர்ந்து  வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் ஒருவரை நாமினேட் செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்று டாஸ்க் வந்தது.

அதன்படி அதிகம் நாமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து  சாச்சனா போட்டியாளர் வெளியேறியுள்ளார்.  சாச்சனா போட்டியில் இருந்து வெளியேறியது நியாயமற்றது என்பது சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தது வருகின்றனர்.

இதற்கிடையே, ஒரே நாளில் வெளியில் சென்ற சாச்சனா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மிக விரைவில் திரும்பவும் நிகழ்ச்சிக்குள் வந்தாலும் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்று கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg boss 8 tamil will return to the house as a wild card


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->