நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்வதால், மத்திய அரசு நீட் விலக்கு அளிக்க வேண்டும் - மருத்துவர் அன்புமணி!! - Seithipunal
Seithipunal


வேலூர் : நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்வதால் குறைந்தது தமிழகத்திற்காவது மத்திய அரசு நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 வேலூர் மாவட்டம் கோணவீட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக வேலூர் மாவட்ட தலைவர் இல்ல திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழக முதல்வர் போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதாக சொல்வது செயலியில் ஒன்றும் இல்லை. மதுவைவிட கஞ்சா போதை பொருளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பாமகவின் நிலைப்பாடு என்ன என்பதை இரண்டு நாட்களில் நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய முடிவை அறிவிப்போம் என்று கூறியுள்ளார். 

நீட் தேர்வு குளறுபடி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், நீட் தேர்வு தேவை கிடையாது. சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு குறைந்தது தமிழகத்தில் ஆவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை எங்களுடைய நோக்கம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government should provide NEET exemption by anbumani


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->