லட்டு விவகாரம் - தமிழகத்தைச் சேர்ந்த நெய் நிறுவனத்திற்கு நோட்டீஸ்.!
central govt notice send to dindukal ghee company for tirupathi laddu issue
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரப்ப௫ரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கடுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என்று கூறியதையடுத்து, நெய்யை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து அவர்கள் சில மாதிரிகளை எடுத்துச் சென்றதைத்தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், உரிய விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary
central govt notice send to dindukal ghee company for tirupathi laddu issue